பக்கம்:உரிமைப் பெண்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராதா

87

 போல இாண்டு துளிகள் பிதுங்கின. பேச்சை மாற்றலாமென்று நினைத்து நான், “யார் உன்னோடு வந்திருக்கும் கிழவன்? அவனுக்கு வயது ரொம்ப ஆகியிருக்கும் போல் இருக்கிறதே?” என்று இப்படிப் பல கேள்விகள் கேட்டேன்.

ஜன நெருக்கத்திலே நாங்கள் நின்று பேசிக்கொண்டிருப்பது பலருக்குப் பெரிய சிரமமாகத் தோன்றியது. அவர்கள் சத்தம்போட ஆரம்பித்தார்கள்.

“கோயமுத்துார் போய் வேண்டுமானால் பேசிக் கொள்ளலாம்” என்று அவள் நகர்ந்து விட்டாள். நான் அப்படியே ஸ்தம்பித்து நின்றுகொண்டிருந்தேன். வடக்குக் கோயமுத்துார் ஸ்டேஷனில் வந்து ஏறிய ஒரு பிச்சைக்காரியை யாரோ அதட்டும் சப்தம் மட்டும் என் காதில் குரூரமாக வந்து புகுந்தது.

“ஏன் இப்படிப் பிச்சை எடுத்துக்கொண்டு திாிகிறாய்? உனக்கென்ன கால் இல்லையா, கை இல்லையா? நாலு விட்டிலே பத்துத் தேச்சுக் கொடுத்தாலும் வயிறு வளர்க்கலாமே?” என்றார் அவர். அந்தப் பிச்சைக்காரி மற்றவர்களைப் போலப் பேசாமலிருந்து விடவில்லை. நல்ல வாயாடி போலிருக்கிறது. “ஏய்யா, இஷ்டமிருந்தால் ஒரு தம்பிடி கொடுங்கோ, இல்லாவிட்டால் பேசாம இருங்கோ, உங்களை யோசனை கேட்கவா நான் வந்திருக்கிறேன்?” என்று சட்டென்று பதில் கூறிவிட்டாள்.

இந்த வார்த்தைகளைச் சிந்தித்துக் கொண்டேயிருந்தேன். ரெயிலும் கோவை ஜங்ஷனுக்கு வந்து நின்றது. நான் அவசரம் அவசரமாகக் கீழே இறங்கி ராதாவைத் தேடிக்கொண்டு போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/92&oldid=1138218" இலிருந்து மீள்விக்கப்பட்டது