பக்கம்:உரிமைப் பெண்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராதா

89


"ஆமாம், எல்லோரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். ஆனால் வேலைக்குப் போய்ப் பார்த்தாலல்லவா அந்தக் கஷ்டம் தெரியும்? அதிலும் சிறு வயது முதற்கொண்டு பிச்சை வாங்கி வயிறு வளர்த்துக்கொண்டு யதேச்சையாகக் திரிந்தவர்களுக்கு அதைப் போலக் கஷ்டமானது வேரறொன்றுமே இல்லை. நானும் வேலை செய்து ஜீவனம் பண்ணலாமென்றுதான் முயற்சி செய்தேன். பணக்காார் என்ன வைதாலும் பேசினாலும் சரி என்று பொறுத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்தேன். சொற்ப சம்பளத்திற்காக அவர்கள் வேலைக்காார்களைச் சக்கையாய்ப் பிழிவது எனக்கு வெறுப்பாக இருந்தது. இருந்தாலும் அதைச் சகித்துக்கொண்டுதான் காலந் தள்ள நினைத்தேன். ஆனால் திக்கற்றவர்களுக்கும் மானம் உண்டு. இந்த உலகத்திலே என் போன்றவர்கள் மானத்தோடு வாழவே முடியாதுபோல் இருக்கிறது. நானும் இந்த மூன்று வருஷங்களாகவே என்ன என்னமோ வேலை செய்து பார்த்துவிட்டேன். எங்கே போனாலும் என்னை இந்த மனிதர்கள் சுலபமான பொருளாக நினைத்தார்கள். குரல் நன்றாயிருப்பதால் சினிமாவில் சேரலாம் என்று சிலர் சொன்னர்கள். அங்கேயுள்ள வாழ்க்கை மகா கேவலமாக எனக்குக் தெரிந்தது. அதனால் அதையும் விட்டு விட்டேன். எனக்கு இந்த உலகத்திலே வாழவேண்டுமென்ற ஆசையே அற்றுப்போய்விட்டது. என் தகப்பனார் தமது தள்ளாக காலத்தில் கஞ்சியில்லாது சாகக் கூடாது என்ற ஒரே நோக்கத்தால்தான் இப்பொழுது இந்த உயிரை வைத்துக்கொண்டிருக்கிறேன்.”

“மறுபடியும் இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/94&oldid=1138225" இலிருந்து மீள்விக்கப்பட்டது