பக்கம்:உரிமைப் பெண்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



துாரப் பிரயாணம்

“எங்கே சடையனைக் காணவே இல்லையே?”

“யார் கண்டா? நேத்து ராத்திரி வேலைக்காரி கூப்பிட்டுப் பார்த்தாள். வரவே யில்லை. காலையில்கூடத் தேடினாள், காணுேம்.”

காலையிலே கூப்பிட்டுப் பார்த்திர்களா?”

“ஆமாம், பின்னே பார்க்காமலா சொல்றேன்?” என்று கொஞ்சம் பிகுவாக என் மனைவி பதிலளித்தாள்.

எனக்கு அவளுடைய பதில் அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை. அதனால் உடனே வேலைக்காரியை அழைத்து விசாரித்தேன். அவளும் அதே மாதிரிதான் பதில் சொன்னாள்.

நான் வேலைக்காரியை விசாரித்தது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. நான் சொன்னா உங்களுக்கு நம்பிக்கை கிடையாது; இப்போ சரிதானே? அந்தச் சனியன் எங்கே பிரயாணம் போச்சோ யார் கண்டா?”

அவள் வார்த்தை என் உள்ளத்தில் ஆழ்ந்து தாக்கியது. மறதியென்னும் அந்தகாரச் சலதியிலே மெதுவாக முழுகிக்கொண்டிருந்த சம்பவங்களை யெல்லாம் கொந்தளிப்புடன் மேல் வரச் செய்துவிட்டது.

இன்றல்ல; ஐந்து வருஷமாகிவிட்டது. எனது ராஜா மணி........ ஆமாம், அன்று நடந்த சம்பவங்களையெல்லாம் இப்பொழுது நடப்பனபோல் என் மனக் கண் முன்பு தோன்றச் செய்துவிட்டது அவள் பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/96&oldid=1535129" இலிருந்து மீள்விக்கப்பட்டது