பக்கம்:உரிமைப் பெண்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

உரிமைப் பெண்

 இதோ என் ராஜாமணி சடையனைக் கூவிக் கொண்டு துள்ளி ஓடி வருகிறான்.

“சடையா, சடையா-வாடா போகலாம்.” அவன் குரல் கணிரென்று ஒலிக்கிறது. சடையன் வாலை ஆட்டிக் கொண்டு ஒரே பாய்ச்சலில் ராஜாமணியின் பக்கத்தில் வந்து அவனைச் சுற்றிச் சுற்றி ஒடியாடிக் தனது சந்தோசத்தைத் தெரிவிக்கிறது.

ராஜாமணியும் வெளியே புறப்பட ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஷர்ட்டைப் புோட்டுக்கொள்ள ஒரு நிமிஷம் நிற்கவும் அவனால் முடியவில்லை. அவசர அவசரமாக அதையணிந்துகொண்டே கிளம்பினான்.

“ராஜா எங்கே புறப்படுகிறாய்?”

“அப்பா, நாங்கள் பிரயாணம் போறோம்”.

“எங்கேடா போகிறாய்? பள்ளிக்கூடம் இல்லாவிட்டால் காலையிலிருந்து ஊர் சுற்ற ஆரம்பித்து விடுகிறாயே?”

“இல்லையப்பா, வாரத்திலே ஒரு நாளாவது வெளியே போகவேண்டாமா? வீட்டிலேயே இருந்தால் எனக்கு எப்படியோ இருக்கிறது”.

“சின்னம்மாவிடம் சொல்லிவிட்டுப் போடா, போய் விட்டு சீக்கிரம் வந்துவிடு.”

எனது அனுமதி கிடைத்ததே போதும் அவனுக்கு. “சின்னம்மாவிடம் நீயே சொல்லப்பா; நான் மாட்டேன்” என்று கூறிவிட்டு ஒரே ஒட்டமாய் ராஜாமணி மறைந்து விட்டான் சடையன் அவனுக்கு முன்னாலே பாய்ந்தது.

தாயில்லாத பிள்ளை. சின்னம்மாவிடம் அவனுக்குப் பற்றுதல் ஏற்படவில்லை. சிறு குழந்தையாக இருந்திருந்தால் ஒரு வேளை தன் தாயின் ஞாபகம் மறக்திருக்குமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/97&oldid=1138237" இலிருந்து மீள்விக்கப்பட்டது