வங்கைவைத்தால், தன் குடிக்க நர்த்தம். வச்சிரமகளந்தகையால், வைக்கற்றுரும் பெடுக்கலாயிற்று. வஞ்சகம், வாழ்வைக்கெடுக்கும். வஞ்சகருறவை, வழுவி விலக்கு. வஞ்சகர்க்கு என்ன நேசங்காட்டினாலும், நெஞ்சில் நேசங் கொள்ளார். வஞ்சகர் பாலூட்டினாலும், நஞ்சாய்விடும். வஞ்சனை, நெஞ்சையடைக்கும். வஞ்சித்து நெடுங்காலம் வாழ்தலினும், மரணமடைதலே நலம். வடகோடுயர்ந்தென்ன, தென்கோடுசாய்ந்தென்ன, வளர் பிறைக்கே. வடக்கத்தியானையும், வயிற்றுவலியையும், நம்பலாகாது. வடக்குப்பார்த்த மச்சுவீட்டைப்பார்க்கிலும், தெற்குப் பார்த்த தெருத்திண்ணை நல்லது. வடக்கே போனவாலியும், வரக்காணேம். வடலியை வெட்டியாள். எருமையைக் கட்டியாள். வடலிவளர்ந்து. கள்ளைக்குடிக்கிறதா? வடவாக்கினியைக்கூட கடைவாயிலடைக்கிற பிள்ளைக்கு. வாழைப்பழந்தின்னுகிறது வருத்தமாயிருக்குமா? வடித்தகஞ்சி வார்க்காத சிற்றப்பன், வழித்துக்கொண்டு வந்தானாம் பணமிட. வடிவிலெமன். மதக்கரட்டோணான். வடிவிலே மன்மதன் போல. வடுகச்சிகாரியங் கடுகுச்சுமுடுகுச்சு. வடுகச்சியம்மா வாலம்மா, வாலைப்பிடித்துக்கொண்டு தொங்கம்மா. வடுகத்துரட்டு. மகாவில்லங்கம். வடுகவில்லங்கமாய் வந்து வாய்த்தது. வடகனுந்தமிழனும், கூட்டுப்பயிரிட்ட கதை. வடுகள் தமிழறியான். வைக்கோலைக்கசுவென்பான். வடையைத் தின்னச்சொன்னார்களா, துளையை யெண்ணச் சொன்னார்களா? வட்டி ஆசை, முதலைக்கெடுத்தது. வட்டியுமுதலுங்கண்டால், செட்டியார் சிரிக்காரா? 175
பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/181
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
