மு.பரமசிவம், இ .ஆ-ப... ஆவணக்காப்பகம்:::::::::தமிழ்நாடு ஆவணக்காப்பகம், மற்றும் வரலாற்று:::::::::எழும்பூர்,சென்னை-600008 ஆராய்ச்சிஆணையர்.
பொருள் .. தமிழ்நாடு ஆவணக்காப்பகம் நூலகம் -
- "உவமைச்சொல் அகராதி' - நூல் மறுபதிப்பு
- செய்தல் - அனுமதி வழங்கப்படுகிறது.
பழைய அரிய தமிழ் நூல்களைக் காப்பாற்றி, மக்கள் படிக்க வகை செய்யும் வண்ணம், அரிய தமிழ் நூல்கள் மறுபதிப்புத் திட்டம் ஒன்றினை தமிழக அரசு கல்வித்துறை அரசாணை (நிலை) எண்.372 (கல்வி) நாள் 20.4.92ல் வெளியிட்டுள்ளது. அத்திட்டத்தின்படி 'உவமைச்சொல் அகராதி" என்னும் நூலை மறுபதிப்பு செய்வதற்காகத் தாங்கள் செய்து கொண்ட மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் மறுபதிப்பு செய்யப்படும் இந்நூலில் தங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவும், அரசின் தமிழ் எழுத்துக் கொள்கை, பொதுமக்கள் படிக்கவும் புரிந்து கொள்ளவும் வசதி ஏற்படுத்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்து கொள்ளத் தங்களுக்கு அனுமதி அளிக்கப் படுகிறது.
1. பழைய தமிழ் எழுத்துக்களுக்குப் பதிலாக அரசு பயன்படுத்தியுள்ள சீர் திருத்த எழுத்துக்களைப் பயன்படுத்திக் கொள்ளல். 2. சில அருஞ்சொற்களுக்கு விளக்கம் சேர்த்தல். மேற்கண்ட அனுமதிக்கப்பட்ட மாறுதல்கள் தவிர மூல நூவினின்றும் வேறு எம்மாறுதலும் செய்ய அனுமதி இல்லை என்பதும் பதிப்பாளருக்குத் தெரிவிக்கப் படுகிறது.
(மு.பரமசிவம்)
பெறுநர்.
திருவாளர்கள் ஜி.எம்.ஸ்வாமி பதிப்பகம். கோபாலபுரம், கோயமுத்தூர் - 641 018.