பக்கம்:ஊசிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொடர்கள், பழமொழிகள், திரைப்பாடல் வரிகள் இவைகளைப் பொருத்தமாகக் கையாண்டிருப்பதால் கவிதைகளுக்கு வலிமை கூடியிருப்பதாகக் கருதுகிறேன்.
ரகுமான்: பயிற்சியில் வரும் 'Craftsmanship' கவிதை ஆக்கத்திற்கு எப்படி உதவும் என்பதற்கு இவை உதாரணங்கள் என்று நினைக்கிறேன். ஒருசில கவிதைகளின் வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அவைகளுக்கு, effect கூடியிருக்கும் என்பது என் அபிப்பிராயம்.
பாலு: நீ உத்திகளைப் பற்றிச் சொல்லுகிறாய் என்று நினைக்கிறேன். 'ஊசிக'ளில் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட உத்தி கையாளப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்குப் பகைப்புலமாக முரண்பாடான ஒன்றை நிறுத்திச் சொல்லும் உத்தி திறமையோடு கையாளப்பட்டிருக்கிறது. "இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி ... ஜனநாயக சோஷலிசம் போன்ற சில கவிதைகளில் ஒரே கல்லில் இரண்டு பழங்களை அடிக்கும் வித்தையை ரசிக்க முடிகிறது. சமுதாயத்தின் ஒரு சில துறைகளைப் பற்றியே திரும்பத் திரும்பச் சலிக்கிற அளவுக்கு குறை சொல்லுகிற சிலரைப் போன்றில்லாமல் பல்வேறுபட்ட துறைகளையும் தயவு தாட்சண்யம் இன்றிச்சாடுவது பாராட்டக் கூடிய அம்சமாக நினைக்கிறேன். 'சட்டத் தின் இரும்புக் கரங்களுக்கும் கிளர்ச்சியின் தீ நாக்குகளுக்கும் தப்பிய நான் இந்தக் கவிதை களின் குத்தலுக்கா திருந்துவேன்' என்றிருக் கிற தடித்த தோலர்களுக்கு இந்த ஊசிகளைக் காணிக்கையாக்கலாம்.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/11&oldid=978724" இலிருந்து மீள்விக்கப்பட்டது