பக்கம்:ஊசிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணிந்துரை


எஸ்.ஏ. பெருமாள்


கவிதை எழுதுவது விதை விதைப்பது போன்றதே. மண்ணைக் கிழிக்காமல் விதைகள் முளைப்பதில்லை. கவிதை இந்த மண்ணைக் கிழித்து முளைத்து வளர்ந்து பிரம்மாண்ட ஆலாவிருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. இதில் மண் என்றாலும் தேசமென்றாலும் மக்கள்தான். எனவே கவிதையென்பது சமூகத்தைப் புனரமைப்பது, சமூகத்தை மாற்றுவது, அவலங்களை அம்பலப்படுத்துவது என்று புலனாகும்.

கவிஞர்களில் நிறைய எழுதிக் குவித்தவர்கள் முதல், ஒரே ஒரு கவிதை மட்டும் எழுதியவர் வரை பல ரகம் உண்டு. எனினும் கவிஞர் எதைப்பற்றி எழுதினார் என்பதுதான் கேள்வி. கவிதைப் பயணத்தில் தடம் பதித்தவர்கள் மிகச் சிலரே. கவிதையை ஒரு கை வாளாய் பிரயோகித்தவர்கள் தமிழில் வெகு அபூர்வம். அவர்களில் தோழர் மீராவும் ஒருவர். சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கத்துண்டிய கூர்மையான 'ஊசிகள்' தொகுப்பு பிரபலமானது. 1974ல் வெளிவந்தது. உள்ளடக்க ரீதியில் இத்தொகுப்பு பெரும் வெற்றி பெற்றது. இதே காலத்தில் வெளிவந்த அவரது கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் தொகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இதோ தமிழுக்கு ஒரு கலீல் ஜிப்ரான் கிடைத்துவிட்டார் என்று கவிஞர்களையே பேசவைத்தது.

10
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/12&oldid=946456" இலிருந்து மீள்விக்கப்பட்டது