பக்கம்:ஊசிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரிகள் விழுகிறது. சாதி வெறியில் பிராமணருக்கு மற்றவர்கள் சளைத்தவரல்ல என்பதை,

'தேவ பாஷையில் தேர்ச்சிமிக்க
சாஸ்திரி ஒருவர் சபையில் சொன்னார்;
'ஜாதி வேண்டும் ஜாதி வேண்டும்;
உடனே சீறி ஒரு தமிழ் மறவர்
ஓங்கிக் கத்தினார்; ஒய் ஒய், இனிநீர்
ஜாதி வேண்டும் என்றால் பொறுமையாய்
இருக்கமுடியாது என்னால்
சரியாய்ச்
சாதி வேண்டும் என்றே சாற்றும்...”

எங்கும் சிவப்பு நாடா முறையால் அரசின் பல்வேறு இலாகாக்களில் லஞ்சமும் ஊழலும் தாண்டவமாடுவதை

“நிர்வாகத் தோட்டத்தில்
நீருற்றத் தவறும்
அதிவீர வர்க்கத்தின்
அலட்சியப் போக்கால்
நாங்கள்
நட்டுவைத்த நல்ல லட்சியம்
பட்டுப் போவதைப்
பார்க்கிறோம்... பதைக்கிறோம்"

என்று பாடுகிறார்.

இத்தொகுப்பில் எதிரொலி எனுங்கவிதை மிகவும் குறிப்பிடத்தக்கது. ‘ஊருக்குத்தாண்டி உபதேசமெல்லாம்’ என்ற பழமொழிக்கேற்ப இக்கவிதை ஆப்பு அறைகிறது. சிக்கனத்தை உபதேசிக்கும் பிரதமரைப் பார்த்து -

“பிரியம் மிகுந்த பிரதமரே
உமது மந்தரி சபையின்

12
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/14&oldid=946441" இலிருந்து மீள்விக்கப்பட்டது