பக்கம்:ஊசிகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பற்று




தேவ பாஷையில்
தேர்ச்சி மிக்க
சாஸ்திரி ஒருவர்
சபையில் சொன்னார்;
“ஜாதி வேண்டும்”
“ஜாதி வேண்டும்:”

உடனே சீறி
ஒருதமிழ் மறவர்
ஓங்கிக்கத்தினார்;
"ஓய் ஓய், இனிநீர்
ஜாதி வேண்டும்
என்றால் பொறுமையாய்
இருக்க முடியாது என்னால்
சரியாய்ச்
சாதி வேண்டும்
என்றே சாற்றும். ”

16
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/18&oldid=1013552" இலிருந்து மீள்விக்கப்பட்டது