பக்கம்:ஊசிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சுரண்டலாமா?





விழித்துப் பார்த்தேன்
விரலை மெதுவாய்க்
கடித்தொரு பாச்சை
கால்வாங்கியது.

பதைத்துக் கேட்டேன்:
'பாவப் பூச்சியே!
கட்டை விரல் ஏன்
தட்டுப்படாமல்
போனதுன் கண்ணில்?

மெலிந்திருக்கின்ற
சுண்டு விரலைச்
சுரண்டலாமா?

      சுரண்ட லாமா?
      சுரண்ட லாமா?’’

17
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/19&oldid=1013553" இலிருந்து மீள்விக்கப்பட்டது