பக்கம்:ஊசிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வயிற்றுப் பா(ட்)டு



என்னை யாரோ
என்று நினைத்துப்
புலவன் ஒருவன்
புகழத் தொடங்கினான்:

'நீண்ட கண்கள்
கூரிய நாசி
அகன்ற நெற்றி
அழகிய பற்கள்
வயிரத்தோள்கள்
மலைபோல் மார்பு,

தொடரவிடாமல்
இடையில் பாய்ந்தேன்:

'ஒகோஉனக்கு
ஒட்டிய வயிறு
போலும்...'

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/24&oldid=1013556" இலிருந்து மீள்விக்கப்பட்டது