பக்கம்:ஊசிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிகப்பு விளக்கு எரிகிறது



எச்சரிப்பதிலே
எங்கள்பட்டணப்
பெண்கள் நல்லவர்...
பெரிதும் நல்லவர்!

தொலைவில் வருவோர்
விலகிச் சென்றிட
உதட்டில் சாயம்
ஒளிவிட வருவார்...

உபாயம் தெரிந்தவர்
உடனே தப்பலாம்,
அபாயம் அருகே
வராதீர் என்றே
எச்சரிப்பதிலே
எங்கள் பட்டணப்
பெண்கள் நல்லவர்...
பெரிதும் நல்லவர்.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/40&oldid=1013573" இலிருந்து மீள்விக்கப்பட்டது