பக்கம்:ஊசிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதலுக்கே மோசம்





யோகி ஒருவர்,
வெள்ளிக்கிழமை
விடியற் காலம்
தண்ணீரில்தான்
நடக்கப் போவதாய்
விளம்பரம் செய்தார்;
வேண்டிய மட்டும்
காணிக்கை அவர்
காலில் குவிந்தது.

பிறகு
குறித்த நாளில்
குறித்த நேரத்தில்
நீரில் யோகியார்
நிசமாய் விழுந்தார்.
விழுந்தெழுந்து
எழுந்து விழுந்து......
பிறகு தரையில் நடக்கவும்
முடியாது போனார்!

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/45&oldid=1013579" இலிருந்து மீள்விக்கப்பட்டது