பக்கம்:ஊசிகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பரிசோதனை


அப்துல் ரகுமான்: பாலு! 'ஊசிகள்' படித்தாயே எப்படி இருக்கிறது?
பால சுந்தரம்: முன்பெல்லாம் புலவர்கள் 'பாடான்திணை'என்று உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தான் தங்கள் பாட்டில் இடம்கொடுப்பார்கள். எல்லாம் மாறுகிற காலமிது. இங்கே, ஊசிகளின் கதாநாயகர்கள் ஊழல் பேர்வழிகள். மீராவுக்கு நயமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. சமுதாயத்தைக் கூர்மையாக பொதுநல உணர்வோடு பார்க்கிறான். அவனது மொழிப் புலமையும் இதற்குக் கை கொடுத்திருக்கிறது.
ரகுமான்: சரி, மீரா! என்ன நோக்கத்தோடு இந்த ஊசிகளை உருவாக்கியிருக்கிறீர்கள்?
மீரா: சமுதாயத்தின் நோய்க்கிருமிகளைப் பார்க்கிறபோது சங்கடப்படுகிறேன். கோபமும் வருகிறது. ஒரு சுகாதாரமானசமுதாய ஆசை தான் இந்த ஊசிகளை உருவாக்கியது.
ரகுமான்: அப்போ இந்த ஊசிகள், மருந்து ஊசி என்கிறீர்கள்.
பாலு: வெறும் ஊசிகளாகக்கூட எடுத்துக்கொள்ளலாமே. குத்தப்படுகிறவர்களுக்கு வலிக்க

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/5&oldid=940360" இலிருந்து மீள்விக்கப்பட்டது