பக்கம்:ஊசிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நவயுகக் காதல்



உனக்கும் எனக்கும்
ஒரேஊர்
வாசுதேவ நல்லூர்......

நீயும் நானும்
ஒரே மதம்......
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட......

உன்றன்தந்தையும்
என்றன்தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்கள்

எனவே
செம்புலப்பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/52&oldid=1013586" இலிருந்து மீள்விக்கப்பட்டது