பக்கம்:ஊசிகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துண்டு விழுந்தது



அந்தி மாலையில்
அந்த மேடையில்......

'இங்கே பலப்பல
இரங்கற் கூட்டம்
நடப்பதுண்டு.”
நானும் தலைமை
வகிப்பதுண்டு.,
உங்கள் முயற்சியை
வாழ்த்துவ துண்டு.,
மக்களும் கேட்டு
மகிழ்வ துண்டு.........

தலைவர் வாயில்
அடிக்கடி துண்டு
விழக்காரணம்-அவர்
கழுத்தில் துண்டு
விழாக் காரணமென
விரைவில் புரிந்தது

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/53&oldid=1013587" இலிருந்து மீள்விக்கப்பட்டது