பக்கம்:ஊசிகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி...



'வெள்ளைத்தாளின்
விலையேற்றத்தை
எப்படித்தடுப்பது?...'

இருக்கவே இருக்கிறது
இந்தியப்
பாதுகாப்புச்சட்டம்-
கற்றை கற்றையாய்க்
கண்டபடி எழுதிக்
கவியரங்கேறும்
கவிகளை உடனே
கைது செய்தால்போதும்
சடசடவென்றே
சரிந்து விழும்!

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/57&oldid=1013592" இலிருந்து மீள்விக்கப்பட்டது