பக்கம்:ஊசிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மானியம் இழந்த மறுநாள்...

எங்கள்
மாஜி மன்னர்
மானியம் இழந்த
மறுநாள் நண்பகல்
பத்துக் காசைத்
தொலைத்து விட்டுக்
கண்டு பிடிக்கக்
கட்டளையிட்டார்

நானும்
கோடைக்காலக்
கொளுத்தும் வெயிலில்
தேடித் தேடி
அலுத்துப்போனேன்.
கடைசியில்
பையில் இருந்த
பத்துக்காசைக்
கையில் எடுத்துத்
தரையில் போட்டுக்
கண்டு பிடித்ததாய்க் கத்தினேன்.

மாஜி மன்னர்
மகிழ்ந்து போனார்
மானியம் மீண்டும்
வந்ததைப் போல!

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/60&oldid=1013595" இலிருந்து மீள்விக்கப்பட்டது