பக்கம்:ஊசிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசேஷ நிருபர்



சீமான் வீட்டுத்
திருமணப் பந்தல்
பற்றி எழுதுவேன்
பத்தி பத்தியாய்

இரண்டு லட்சம்பேர்
இருக்கத்தக்க
பந்தல் என்பேன்

அதை
மூன்று லட்சம்பேர்
தினமும் காண
வரிசை வரிசையாய்
வருகிறார் என்பேன்.

நான்தான்
வீரமணியின்
விசேஷ நிருபர்

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/65&oldid=1013600" இலிருந்து மீள்விக்கப்பட்டது