பக்கம்:ஊசிகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாலு: Dryden தன் அங்கதக் கவிதைகளில் ஊரை யும் பேரையும் சுட்டித்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றை நீக்கினாலும் கவிதையாக எப்போதும் படித்து ரசிக்க முடியும் என்று T.S. Eliot சொல்லுகிறாரே.
ரகுமான்: அவருடைய கவித்திறமை இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
மீரா: 'ஊசிகளில் வரும் பெயர்கள் யாரையும் குறிப்பிடுவனவல்ல; ஆனால் கருத்து யாரையும் குறிப்பிடலாம்.
ரகுமான்: தற்காலிகச் சிக்கல்களைப் பாடுவதனால் கவிதை நிரந்தரத்துவத்தை இழந்துவிடும் என்று T.S.Eliot சொல்லுகிறாரே, ஊசிகளில் இப்படிச் சில தற்காலிகச் சிக்கல்களையும் பாடியிருக்கிறீர்களே?
மீரா: ஆமாம்; தற்காலிகச் சம்பவங்களும் வரலா றாவதில்லையா? இவற்றிற்கும் Historical Value இருக்குமல்லவா?
பாலு: 'ஊசிகளின் கருத்துக்கள் கற்பனையில்லை என்பதுதான் இவற்றின் வலிமை. கற்பனையாக இருந்தால் ஊசிகள் தைப்பதற்கு இடம் இல்லாமல் போயிருக்கும்.
ரகுமான்: ஒரு கிழிசலைத் தைக்க வாங்கிய ஊசியை மீண்டும் தேவைப்படும்போது பயன்படுத்தப் பத்திரப்படுத்திக் கொள்வதுபோல் இவைகளையும் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். மீராவின் ஊசிகளில் ஒரு குறிப்பிட்ட தத்துவ நூல் கோக்கப்பட்டிருக்கிறது; இல்லையா?
பாலு: ஆமாம்; நானும் உணர்கிறேன். இப்படித் தன் சார்பை ஓங்கிப் பறையடிப்பதால் இலக்கிய அசுணங்களுக்கு விபத்து ஏற்படாதா?

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/7&oldid=978620" இலிருந்து மீள்விக்கப்பட்டது