பக்கம்:ஊசிகள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு
கன்னித்துக்கம்

முகத்தை அலம்பிச்
சிற்றுண்டி நிலையம்
சென்று திரும்பினேன்

வேகமாய்
விகடனும் குமுதமும்
படித்து முடித்தேன்

மெல்லக்
காகிதக்கட்டை எடுத்துத்
தூசியைத் தட்டித்துடைத்துக்
கடமையைச் செய்யத்
தொடங்கும் போது...
கதவை அடைத்தான்
காவற் காரன்

மணி ஐந்தாயிற்றாம்!

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/77&oldid=1013766" இலிருந்து மீள்விக்கப்பட்டது