பக்கம்:ஊசிகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பஞ்சப்படி




மூட்டை மூட்டையாய்
முதுகில் சுமையை
ஏற்ற மட்டும்
ஏற்றி விட்டு
ஒரே ஒருதுரும்பை
எடுத்துப் போட்டதும்
பாரம் எல்லாம்
பறந்து போனதாய்
எப்படி உன்னால்
மகிழ முடிந்ததோ?
ஓ......
பாலைவனத்தில்
பயணம் போகும்
ஒட்டகமே!

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/80&oldid=1013614" இலிருந்து மீள்விக்கப்பட்டது