பக்கம்:ஊசிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் அவன் நண்பன்


நான் அவன் நண்பன்;
நல்ல நண்பன்......
ஏன் அவன் இப்படி......

ஏன் அவன் இப்படி
இருக்கிறான்?
கண்ணோதுர்ந்த கிணறு
கன்னமோ ஒய்ந்த களத்துமேடு
உதடோவறண்ட வரப்பு
முகமோ கோடைக்கால வயல்...
ஏன் அவன் இப்படி...
எனினும் இன்றவன்
பட்டுடை பூண்டுள்ளான்;
பரிமளம் பூசியுள்ளான்;
மாப்பிள்ளை மாதிரி
மல்லிகை மாலை
மார்பினில் சூடியுள்ளான்.
பற்பல மாநில ஒப்பனைக்காரர்
பக்கம் சூழ்ந்துள்ளார்.

அவனைப்
பார்த்துச்சிந்தையில்
பரவசச்சித்திரம்

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/85&oldid=1013619" இலிருந்து மீள்விக்கப்பட்டது