பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயக்குறாக் காதை



ஈங்குய்ப் பதுவே இவன்கட னாகும்’
எனுமொழி இயம்ப, இருமொழிப் புலவர்
நனிமிக மகிழ்ந்து பணிவிழி ததும்ப
105
மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கைம்மலர் குவித்து
'முருகா நின்பெருங் கருணைதான் என்னே!
உருகா நின்றுளம் உன்பெயர் ஓதிப்
பெருகும் அடியவர் எத்தனைப் பேருளர்!
அவரெலாம் இருக்க அடியேன் மாட்டுக்
110
கட்டளை யிட்ட கருணையே கருணை!
கிட்டரும் புண்ணியச் செயல்செயக் கிளத்தி
அடியனை ஆளா ஆக்கிய அருட்குப்
படிமிசை எங்ங்னம் பாராட் டுரைப்பேன்?’
என்ற மொழியால், எழுந்தருள் பத்தர்க்
115
கிரட்டிப் பாக எழுந்தது நம்பகம்;
மீண்டுங் கூறினர்; ‘ஆண்டவன் முருகன்
ஈண்டருள் ஆணையை ஏற்று முடிப்பேன்;
எளியேன் எனையும் பொருட்டென எண்ணி
அளியீர் கனவிடை அருளிய கந்தன்
120
கட்டளை பற்றிஎன் கனவிலும் தோன்றிச்
சுட்டி யருளுதல் ஆகா தோ?அம்.
முருகன் அருட்கியான் முழுத்தக விலனோ?
நெடுந்தொலை வென்றும் நினையா னாகிப்
படர்ந்திவண் உமைவரப் பணித்த முருகன்
125
எளியேன் கனவிலும் வாரா திருப்பனோ?
அளியன் அவன்தான் அடியேன் கனவிடை
இற்றை இரவில் எழுந்தருள் செய்குவன்
மற்றைநாள் விடியல் கட்டளை நிறைவுறக்
செய்குவன்’ என்று செப்பின ராக;
130