பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயக்குறாக் காதை

ருஎ


அருளிய ஆணையை ஐயுறல் வேண்டா

215


கந்தன் நமக்கருள் கட்டளை பொய்க்குமா?
இந்தப் பணியில் இன்னுமேன் தாழ்வு?
தொடுகுழி அமைத்தல் தொண்டர் நமக்கே

இடுபணி யாகும் ஆதலின் ஐய,

220


ஊரார் அரவம் ஒடுங்கிய பின்னர்
ஈராறு கையன் இட்ட பணியை
இன்றிராப் பொழுதே இருவருந் தொடங்குதும்’
என்றனர் புலவர்; இரங்கிய குரலில்

வந்தவர் திருவாய் மலர்ந்தனர் ‘செய்யலாம்

225


தொடுகுழி யதனுட் படுபொருள் ஒருகால்
அடைதல் இயலா தாகினென் செய்வோம்!’
என்னுமோர் ஐயம் எழுப்பலும் ஆஆ!’
இன்ன வகையில் எண்ணுதல் தகுமா?

நெடுந்தொலை விருந்திவ் விடந்தனில் வரஉமைக்

230


கடம்பன் அருளினன் இருவர் கனவிலும்
மயில்மிசை ஏறி மனைவி மாரொடும்
அயில்வேல் முருகன் காட்சி யருளினன்;
பொன்னின் புதையல் பொருந்தும் இடமும்

சொன்னவன் அவனே, சொலும்அம் மொழியில்

235


ஐயம் உறுதல் அடாத பாதகம்;
ஐய நும்போல் அறியாத் தனத்தால்
மெய்யன் மொழியில் ஐயம் உற்றுநான்
ஆண்டவா முருகா அக்குழி யதனைத்

தோண்டிய பின்னர்ச் சொலும்பொன் இலையேல்

240


யாமென் செய்குவோம்?’ என்று வினவ,
‘பூமென் முகத்திற் புன்னகை அரும்பி,
ஆறு முகத்தன் சிறுத வின்றித்