பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயக்குறாக் காதை


துங்க முகமும் துவண்டது; வாயும்
மலரா திருந்தது; மற்றவர் நிலையை
நோக்கிய புலவர், ‘நோன்பிற் பெரியீர்!
ஆக்கிய தவப்பயன் வாய்த்தது போலும்,
275
ஒள்வேல் முருகன் உகந்த வெள்வேல்,
தலத்தின் விருட்சம் ஆகித் தழைக்க அந்
நிலத்திடைக் கோவிலும் நிமிர்ந்தெழு மாகின்
அளப்பில் தவமே! ஆர்க்கது வாய்க்கும்?
மலைத்தல் தவிர்க மற்றுண வுண்டு
280
மாலைப் பொழுதில் வந்தருள் புரிக;
என்றதும் சாமிகள் எழுந்து நடந்தனர்,
மாலை வந்தது மாதவர் வந்திலர்,
கந்தன் பெயரால் கயிறு திரித்தவர்
‘அந்தர்த் தியானம்’ ஆகினர் அன்றே!
285