பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. வழக்காடு காதை


‘கலையறி வார்ந்த நெஞ்சிற்
கருவுறும் கவிதை எண்ணம்,
புலமையிற் செறிந்த பாடல்
புதல்வனாய் வந்து தோன்றும்,
கலையது கருக்கொள் ளாராய்க்
கருவினை உயிர்க்க எண்ணின்
நலமுறும் மகவா தோன்றும்?
நகைப்பன்றோ வந்து தோன்றும்!
1
'நிறைபுலம் செழிக்கப் பெற்றோர்
நிலையுறும் பாடல் யாக்கும்
முறைகளும் தெரிதல் வேண்டும்
முற்றிய புலமை என்றால்
நெறிபிற ழாத பாடல்
நெய்திடுந் திறமை வேண்டும்,
நெறிபெறுந் தமிழ்த் தொண் டாக
நினைத்திதைச் செய்க’ என்பார்.
2