பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழக்காடு காதை


பொருள்பெற்று நலம்பெற்றுப் புவியெங்கும்
புகழ்பெற்றுக் கலையின் அன்னை
அருள்பெற்றேன் எனவுரைக்கும் வீமகவி
அங்கங்குத் தலபு ராணம்
மருள்பெற்ற மக்களிடம் பாடிவரு
மானங்கள் பெருக்கி வந்தார்;
இருளுற்ற உலகத்தில் விழியற்றோன்
ஏறுநடை போடு மாபோல்!
9
தனக்குரிய தளையன்றிப் பிறதளைகள்
தட்டாத வெண்பா யாப்பால்
மனக்குரிய நீதிவழி எனும் நூலை
வடித்தெடுத்துத் தேவ கோட்டைத்
தனப்பெரியார் இரட்டித்த அருசோம
சுந்தரனார் [1] தலைமை ஏற்க
நினைத்தபடி அரங்கேற்ற வீமகவி
நிகழ்ச்சியினை அமைத்தி ருந்தார்.
10
அரங்கேறும் அழைப் பேற்ற நம்மணியும்
அங்கிருந்தார்; பாடல் கேட்டுத்
தரங்கூற வல்லஇவர் அதுகேட்டுத்
தலைவலியைப் பொறுத்துக் கொண்டார்;
இரங்காது நிற்பாரோ நற்புலவர்?
என்செய்வ தெனநி னேந்தே
அரங்கேறி முடிகாறும் அமைதியுடன்
அவ்வவையில் வீற்றிருந்தார்.
11


  1. இரட்டித்த அரு-அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியார்