பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்


புலவர்தமை இகழ்ந்துரைப்பார் எவரே யாகப்
பொறுமைகொளார் மறுத்திடுவார் அச்சங்
கொள்ளார்;
பொலிவுதரும் பதவியினால் ஒர மைச்சர்
புலவர்தமை இகழ்வுரையால் எள்ளல் செய்தார்;
'இலகுதமிழ் ஆசிரியர், க. கா. [1] என்ற
இரண்டுக்கு மேலொன்றும் அறியார்’ என்றார்;
பலருமவண் கைதட்டி ஆர்ப்ப ரித்தார்
பண்டிதமா மணியுமதைப் பார்த்தி ருந்தார்.
18
அமைச்சர்தரும் மதிப்புரைகள் உண்மை; ஆனால்
அதற்குமேல் இவர்தெரிந்த பொருள்தான் என்ன?
நமக்குலகில் கடவுளொடு காதல் என்ற
நற்பொருளை விஞ்சுகிற பொருள்தான் உண்டா?
தமிழ்ப்புலவர், அரசியலில் ஆங்கி லத்தில்
தனிப்புலவர், இவ்வகையில் யாரும் ஒன்றே;
அமைப்பிதன்மேல் அறியாதார் கூட்டத் துள்ளே
அமைச்சருந்தாம் ஒருவ’ ரெனத் துணிந்து ரைத்தார்
19
பண்டிதமா மணிமொழியைக் கேட்ட மக்கள்
பாராட்டிக் கைதட்டி ஆர்ப்ப ரித்தார்,
தண்டமிழைப் பழித்தாலும் கைகள் தட்டித்
தமிழ்மாந்தர் ஒலியெழுப்பி மகிழ்ந்தி ருப்பர்;
விண்டவரை மறுத்துரைத்துத் தாக்கும் போதும்
வேகமுடன் கைதட்டி ஆர்ப்ப ரிப்பர்;
கண்டபடி கைதட்டிக் களித்தல் ஏனோ?
கையிருக்குங் காரணத்தால் தட்டித் தீர்ப்பர்.
20


  1. க- கடவுள், கா - காதல்