பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்வல்ல காதை

எரு

பழையதமிழ் நூலெனினும் சமயம் பற்றிப்
பகர்கின்ற நூலெனினும் எதுவென் றாலும்
பிழையறவுந் தெளிவுறவும் அவையோர் உள்ளம்
பீடுறவும் பதிவுறவும் தேர்ந்த சொல்லின்
மழைபொழிவார்; நெடுநேரம் நனைந்தி ருப்போர்
மனத்தகத்துச் சலிப்பொன்றும் தோன்றா வண்னம்
நுழைபுலத்தால் நகைச்சுவையுங் குழைத்தெ டுத்து
நுவன்றிடுவார்; அஃதில்லாப் பேச்சே யில்லை.

27

இழிகதைகள் புன்மொழிகள் இவற்றைக் கூறல்
இலக்கியமா? நகைச்சுவையா? புலமை தானா?
அழிசெயலே வேறன்று; பண்பு போற்றி
அறிவுக்கு விருந்தாகக் கேட்போ ருள்ளம்
கழியுவகை மீதுார உயர்ந்த வற்றைக்
கற்றவரும் வியந்துரைக்கச் சிரிப்புத் தோன்றப்
பொழிவதுதான் சுவையாகும் முயன்று பெற்ற
புலமைக்கும் அழகாகும் சால்பும் ஆகும்.
28

மண்டியவர் மனமகிழ மணியார் ஒர்நாள்
மாமுகில்போற் சொன்மழையைப் பொழியுங் காலை
பெண்டிர்சிலர் பேசியிடை யூறு செய்யப்
பேரவையிற் சிலரெழுந்து தடுத்துப் பார்த்தார்;
கண்டஇவர் 'பெண்மணிகள் அவர்பே ராகும்
கலகலவென் றம்மனிகள் ஒலியெ முப்பிக்
கொண்டிருத்தல் இயல்பன்றே’ எனவு ரைத்தார்;
கையொலிகள் அடங்கியபின் அமைதி கண்டார்.

29