பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எசு

ஊன்றுகோல்

கற்றவர்கள் மெச்சுமரு ணாச லப்பேர்க்
கவிவாணர் கதிரேச மாம ணிக்குச்
சொற்பொருளால் நலமிக்க பாடலொன்று
சொல்லிவர வேற்பளித்தார்; அந்தப் பாட்டில்
'சொற்பொழிவு நிகழ்த்திவருங் கூட்டந் தன்னிற்
சுடர்மணியார் அரங்கிருந்து தொடங்கி விட்டால்
பற்பலரும் அங்காந்து செவிம டுத்துப்
பாவையென அமர்ந்திருப்பர்’ என்று சொல்ல
30

செவிமடுத்த மாமணியார் முறுவ லித்துச்
சிரித்தவையோர் மகிழ்ந்திருக்கப் 'பலரும்’ என்று
கவிகொடுத்த சொல்லை இடைக் குறையாக் கொண்டு
கற்பித்தார்; 'பல்லுடையார் வாய்தி றந்து
செவிமடுப்பர் என்பதனால் எனக்குப் பற்கள்
இல்லாத செவ்விதனைச் சிந்தை வைத்துக்
கவிதொடுத்தார் போலும்’ எனச் சொன்ன போது
கையொலியும் வாயொலியும் நிரம்பிற் றங்கே.
31

கருத்து வேற்றுமை பெருத்துள நாளில்
கறுத்தெழுந் தார்சிலர் கம்பன் யாரெனக்
கிளர்ச்சிகள் நடத்தினர்; கிழவர் இவர்தாம்
நகைச்சுவை மொழியால் நவின்றனர் சிலசொல்
"கம்பை யுடையவன் கம்பன் அதனால் 5
கம்பன் யானே’ கழறினர் இவ்வணம்;
அவையில் இருந்தோர் அனைவரும் அந்நகைச்
சுவையால் மகிழ்ந்தனர்; சோர்ந்தன கையே.