பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஅ

ஊன்றுகோல்



மற்றொரு மேடையில் சொற்ற மொழியில்
உற்ற நகைச் சுவையை ஒர்ந்து தெரிக;
‘ஒருநாள் இரவில் உறுதுயில் கொள்ள 40
அரவணி பெருமான் கனவிடை வந்தார்;
பெருமகிழ் வுற்றுநான் ஒருவரங் கேட்டேன்;
இறைவன் என்பால் இன்முகங் காட்டித்
'தந்தம்' உமக்குப் போமெனச் சாற்றினர்;
தந்தோம் உமக்கெனச் சாற்றினர் என்று 45
சிந்தையில் மகிழ்ந்தேன்; வந்தது விடியல்
கனவும் வரமும் பலித்திடக் கண்டேன்
ஆம்ஆம் பற்கள் அனைத்தும் விழுந்தன;
எனலும் அவையோர் எழுப்பினர் நகையே,
தமிழோ டாங்கிலந் தக்கவா றுணர்ந்தோர் 50
அமிழ்தெனப் பொழியும் ஆற்றலர் ஒருவர்
'அமெரிக்க நாட்டில் ஆங்கிலக் கவிஞர்என்
றெமருக் குரைப்பேன்’ என்றொரு மேடையில்
சொற்பெருக் காற்றினர்; மற்றது முடிந்ததும்
முடிப்புரை தொடுக்கும் வழக்கின விடுத்துத் 55
தமிழறி புலவர் தக்கவா றுரைத்தனர்;
இன்றுநான் கேட்க இன்னுரை வழங்கியோர்
இடைவேளை படைக்கும் "இடைவேலை எனக்குத்
தராது முடித்துத் தந்தனர் என்றுதாம்
ஆங்கிலம் பயிலா அத்தகு நிலையைப் 60
பாங்குடன் குறிப்பாற் பகர்ந்தது கேட்டு
நினைந்து மகிழ்ந்தது நீடிய அவையே.