பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசு

ஊன்றுகோல்


தன்மானங் கருதாமல் இனத்தின் மானம்
தமிழ்மானம் இவையிரண்டுங் கருதல் ஒன்றே
பொன்மாலை, புகழ்மாலை, மலர்ந்து தோன்றும்
பூமாலை சூடுகிற தலைமைப் பண்பாம்
தன்காலை வருடிவரும் சிலரைக் கொண்டு
தருவிலையாற் பெறுவதுவா , தலைமை யாகும்?
எந்நாளும் தன்னேவியந் தனியா தென்றும்
எவரிடத்தும் பணிவதுதான் பெருமை யாகும். 10

இருவருமே தமிழுணர்ந்தோர் குறள்ப யின்றேர்
இயல்புடையோர் தமிழ், சைவம் என்று சொன்னால்
உருகுகிற மனமுடையோர் அதனால் நெஞ்சத்
துணர்ச்சியெனும் கொடுமுடியில் நின்றி ருந்தார்.
ஒருவருடன் ஒருவர்விழி கொண்டு பேசி
உவகையில்லை உள்ளத்துள் மாறிப் புக்கார்
உருவமது வெவ்வேறு பெறினும் அங்கே
உள்ளங்கள் ஒன்றாகி மகிழ்தல் கண்டோம். 11

துறவுலகில் ஞானியார்? என்ற ஐயம்
தோன்றிவரும் நாளிற்ருன், சுரும்பு சூழும்
நறவுமலி பாதிரிசேர் புலியூர் தன்னில்
நலம்பெருக்குஞ் செம்பொருளின் வளம்பெ ருக்கி
அறவுரைகள் நிறைதமிழின் சுவைபெ ருக்கி
அவாவறுக்கும் ஞானியார் அமர்ந்தி ருந்தார் .
நிறைவுகொளும் மதிப்புல்வி அவர்தம் கேண்மை
நெஞ்சுவந்து தமிழ்சிவம்போற் பேணிக் கொண்டார்.

12


  • திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள்