பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நட்புவளர் காதை

அ௯

பேரரசர் நிகர்தோற்றம் சிவந்த மேனி,
பெ. ராம. சித. எனும்பெயரர்; நீறு பூசி
ஏரொழுகும் நெற்றி யுடைய அன்பர்;
எழிலொழுகுந் 'தமிழ்வாழ்த்து' வையம் ஈன்ற
சீரணியுங் கலிவிருத்தம் பாடித் தந்து
சிறப்படைந்த கரந்தையுறு கந்த சாமிப்
பேருடையார் இருவரையும் தமது வாழ்விற்
பெற்றஇரு-கண்களெனப் பேணி வந்தார் 19

உரந்தழுவுந் தமிழ்மறவர் அஞ்சா தென்றும்
உரைநிகழ்த்தும் சொற்செல்வர் படர்ந்த டர்ந்து
நிரந்துவரும் எழில்மீசை யுடைய வீரர்
நிலத்துயர்ந்த செந்தமிழின் வளர்ச்சிக் காகக்
கரந்தைதனில் தமிழ்ச்சங்கம் கண்ட சோழர்
கனிவுடையார் 'உமாமகே சுரனார் என்று
சிறந்தபெயர் கொண்டவரை நயந்து போற்றிச்
செயற்கரிய நட்புளத்திற் பொலிய வாழ்ந்தார். {{float_right|20}

கொண்டொழுகும் பண்பாட்டில் இனிமை யுண்டு;
கொழித்துவரும் நன்பாட்டில் எளிமை யுண்டு;
தண்டமிழில் நீங்காத நெஞ்சம் உண்டு;
தருபொருளை வாங்காத கையும் உண்டு,
பண்டையநற் புகழேந்தி போன பின்வெண்
பாவிற்குப் புகழேந்தித் தந்த துண்டு;
கண்டுநிகர் கவிமணியார்-நெஞ்சில் நின்று
களிநடஞ்செய் கதிரேசர் ஆன துண்டு.

21