பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬ய

ஊன்றுகோல்


பாட்டின்பஞ் சுவைப்பதிலே தனித்த ஆற்றல்
படைத்துயர்ந்த சுவைமணியார், ' இனிய
பாட்டைக்
கேட்டவர்க்குச் செவிகுளிரப் பாடிப் பாடிக்
கிளக்கின்ற சொல்வல்லார்; கம்பன் தந்த
பாட்டின்கண் பலவற்றைச் சுண்டிப் பார்த்துப்
பதர்களிவை எனத்தூற்றும் செயலார்; அக்கோட்
பாட்டுக்கு மாறுபடும் நிலையி ருந்தும்
பண்டிதமாமணி மணியார் நண்ப ரானார் . 22

சேதுசமத் தானத்துப் புலவ ரான
செந்தமிழ்தேர் இராகவையங் கார்க்கு நண்பர்;
ஏதமொரு சிறிதுமிலாக் கா. சு. பிள்ளை
என்றபெரு மகனார்க்கு இனியநண்பர்;
ஒதுமொழிச் சுந்தரனே ஆரூர் தந்த
ஒள்ளியனைத் தோழமையால் அனைத்துக் கொண்ட
மாதுசுமக் குஞ்சடையான் அடிவ ணங்கும்
மாமனியார் பண்பாளர் தொடர்பு கொண்டார். 23

நிலத்தடியில் அமைந்திருக்கும் பொன்னும் மற்றும்
நீர்க்கடலில் கிடக்கின்ற துகிரும் முத்தும்
மலைப்புலத்தில் விளைந்துயர்ந்த மணியுங் கூடி
மாநிலத்தார் அணிகலன்கள் அமைக்குங் காலை
கலத்தினிடை ஒருசேரத்-தோன்றி யாங்குக்
கலைபலவுங் கற்றுணர்ந்த சேய்மை
நிலத்தவர்தாம் என்ருலுங் கல்வி கேள்வி
நிறைந்தொளிரும் மணியின்பாற் கலந்தி ருந்தார்.

24


இரசிகமணி. டி. கே. சி.