பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௯உ

ஊன்றுகோல்


சங்கத்துத் தமிழ்பரப்பிப் புகழ்ப ரப்பித்
தனியொளிபெற் றிலங்குமணி புகழைக் கேட்டுத்
தங்கத்தில் மணிவைத்துப் பார்க்க வல்ல
தனவணிக மரபரசர் தாம மைத்த
சங்கத்தில் நம்மணியை வைத்துப் பார்க்கத்
தனியார்வம் மிக்கவராய் அணுகிப் பார்த்தார்
அங்குற்றுப் பணிசெய்ய விரும்பா ராகி

அதற்கிவர்தாம் இசைவுதர மறுத்து விட்டார்.
3


எதுவெனினும் இதுவரையில் வெற்றி ஒன்றே
ஏந்திவரும் அரசரிதை விட்டா ரல்லர்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்ற வண்ணம்
இயற்றுவதிற் கைவந்த கலைஞ ரன்றோ?
கதிரவரின் உறவினர்யார்? எவர்தம் சொல்லுக்
கிவர்பணிவார்? என்றாய்ந்து காண வல்ல
மதுகையினால் தாமுயன்று வெற்றி கண்டார்

மணிப்புலவர் அதன்பின்னர் ஒப்புக் கொண்டார்.
4


மீனாட்சி கல்லூரி என்று தோன்றி
மேல்வளர்ந்து பல்கலைசேர் கழக மாகித்
தானாட்சி செய்துவரும் நிறுவ னத்தில்
தமிழாட்சி செய்வதற்கு மனமி சைந்தார்
மீனாட்சி பங்காளர்; ஏற்ற பின்னர்
மேலாட்சி ஒன்றில்லை என்று போற்றத்
தேனாட்சி செய்கின்ற தமிழ்வ ளர்த்தார்

திசையெல்லாம் பேராட்சி செய்யக கண்டார்.
5

1 - வலிமையினால்.

2 - மீனாட்சி ஆச்சியின் கணவர் கதிரேசர்