பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௯௯

ஊன்றுகோல்

படரறிவுப் பண்டிதர்பாற் கற்கும் ஆர்வம்
பழுத்தெழலால் இங்குவந்து தெளியக் கற்றார்,
கடலலைகள் தாவிவரும் கொழும்பு 'றேயல்’
கல்லூரிப் பேராசான், பயில்வார் நெஞ்சைத்
தொட எழுதும் எழுத்தாளர், சமய நூல்கள்
தொன்மைமிகும் பிறநூல்கள் நினைத்தால் நெஞ்சில்
எடுபிடிகள் போலவரக் கற்றுத் தேர்ந்த
இலக்குமண ஐயருக்கும் இவரே ஆசான். 15

'தோயுமுளக் கதிர்மனியும் க.சு. பிள்ளை'
எனச்சொல்லுந் தூயவரும் கலைக ளெல்லாம்
ஆயுமுயர் கழகத்தின் இரண்டு கண்கள்:
யாம்பயிலும் அந்நாளில் அந்த மேலோர்
ஞாயிறெனத் திங்களெனத் திகழ்ந்து நிற்பர்;
நல்லவர்பாற் பயிலஎழும் ஆர்வம் உந்தப்
பாயுமலைக் கடல்கடந்து சென்றோம்; அங்குப்
பல கற்ருேம் எம்வாழ்வின் பயனும் பெற்றோம்' 16

'அகப்பொருளோ புறப்பொருளோ நீதி நூலோ
எதுவெனினும் அளவில்சுவை சொட்டச் சொட்டப்
புகட்டிடுவார் அச்சுவையிற் சொக்கி நிற்போம்:
பொழுதகலல் தெரியாது பாடஞ் சொன்னால்,
அகத்துறுவோர் விரும்பிய நூல் உரைப்ப தற்கும்
அகஞ்சலியார் அவருளமும் புலமுங் கண்டு
திகைப்புறுவோம் களிப்புறுவோம்;' இவையனைத்தும்
தென்னிலங்கை இலக்குமண ஐயர் சொற்கள் 17


1. பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளே சி. வீடுதேடிவருவோர்