பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


கருதிய சபையினர் களிப்பின் பெருக்கால்
தண்டமிழ்த் தாத்தா சாமி நாதப்
20
பண்டிதர் தேலைமையில் தந்தனர் அதனை
கரையிலாக் கல்விக் கடலிற் றோய்ந்து
விரிதரு புலமை முதிர்தரல் கண்டோர்
சென்னையில் நிகழ்ந்த சீர்சால் புலவர்
மாநா டதனில் மாண்புறு பெரியோர்
25
முதுபெரும் புலவர் எனும்பெயர் மொழிந்தனர்;
அதுவும் இவரால் அணிபெற் றதுவே:
சமயநூற் றெளிவும் சார்ந்ததன் நெறியில்
அமைவுறும் வாழ்வும் அசையாப் பற்றும்
செம்பொருள் உணர்வும் சித்தாந் தத்துள்.
30
திளைத்துத் திளைத்துத் தெளிந்த நுகர்வும்
உளத்தாற் பொய்யா ஒழுக்கமும் கண்டு
குறைவறு குன்றக் குடியில் மேவிய
திருவண் ணாமலைத் திருமடம் உடையார்
இனிய சைவ சித்தாந்த வித்தகர்
35
எனுமொரு பெயரை அளித்தார் இவர்க்கே
திருந்திய இவர்க்குப் பொருந்திய பெயரைத்
தருந்தல மாகித் தனிச்சிறப் புற்றது;
ஆங்கில மன்னரெம் அன்னை நாட்டில்
ஓங்கிய செங்கோல் ஒச்சுங் காலை
40
திருமுடி தாங்கிய செவ்வியர் பிறந்தநாள்
வருகையிற் பற்பல விருதுகள் வழங்கிப்
பெருமைகள் செய்தல் பேணிய மரபாம்
அப்பெரு நாளில் ஆய்தமிழ் தோய்ந்த
இப்பெரும் புலவர்க்கு இராவ்சா கிப்பெனும்
45