பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


உண்மைத் தமிழன் உள்ளம் எதுவோ45
கண்வைத் ததனைக் கட்டிக் காத்தனர்;
புகழ்ப்பே ராசையாற் பொருட்பே ராசையால்
நகத்தகும் தொழும்பர் ஆகின ரல்லர்;
தலைநாள் தொட்டுக் கடைநாள் வரையும்
கலைமா மகளின் கடைக்கண் ணருளால்50
தமிழ்மகன் எனவே தாமுயிர்த் திருந்தார்;
துரய நெஞ்சினர் தொடுத்தநன் னுால்கள்
ஆய்தொறும் இன்ப அன்பினை வழங்கிடும்;
சமய நெறியிற் றணவா [1] ஒழுக்கும்
அமையுமந் நூலினுள் ஆழ்ந்த புலமும்55
நுண்பொருள் ஒர்ந்து நுவலுந் திறமும்
உண்மைப் பொருளின் உணர்வும் ஒருங்கே
கைவரப் பெறலான் காட்டும் சமய
மெய்வழி ஆய்ந்து விளக்கும் நூலினை
உரைநடைக் கோவையென் றொருபேர் தாங்க60
வரைந்து தந்தனர் வாய்மையின் நின்றே;
ஐந்து கட்டுரை ஐந்தெழுத் [2] தாமெனப்
பைந்தமிழ் நடையிற் படைத்துத் தந்தனர்;
சான்றோர் யாத்த சங்கப் பாக்கள்
ஆன்றோர் சுவையுடன் ஆக்கிய காப்பியம்65
மெய்யுணர் வாளர் செய்தருள் நூல்களுள்
வைகும் நறுங்கனி வளவிய எடுத்துச்
சாறு பிழிந்து சர்க்கரை தூவி
ஊறும் பாலும் ஒள்ளிய தேனும்
அளவுடன் கலந்து சுவையுற ஆக்கி70


  1. நீங்காத
  2. பஞ்சாக்கரம்