பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


கரந்தையிற் சங்கங் கண்டோர்
கனிந்தநல் லன்பின் ஊறிச்
சுரந்ததோர் மலரைச் சூட்டிச்
சொல்லரும் மகிழ்வு பெற்றார்;
பரந்தநம் நாட்டில் தோன்றும்
பற்பல கழகச் சார்பில்
நிரந்துபா மலர்சொ ரிந்து
நெஞ்சினைத் திறந்து வைத்தார்.12

இறுதியில் மணியார் இயம்பினர் நன்றி:
'பாட்டினும் உரையினும் பகர்ந்தன யாவும்
கூட்டு மன்பைக் குறித்தன வேயாம்
பன்மொழிப் புலவர் [1] பாரதிச் செம்மல் [2]
என்னுயிர்த் தோழர் [3] இவர்முத லாகச்5
சொற்றநற் பெரியோர், உற்றுழி யுதவும்
பற்றுள [4] சபையார் மற்றும் இவ்வுழை
இவ்விழா நிகழ்ச்சிகள் செவ்விதின் இயக்கிக்
கவ்விய அன்புடன் கடமை யாற்றியோர்
மலரும் அன்பின் விளைதரும் விலையிலா10
மலரினை ஈந்து மனமகிழ் வூட்டியோர்
அனைவரும் என்றும் நினைதற் குரியார் ;
அணிமையில் நிகழ்ந்த அண்ணா மலைமன்
மணிவிழா நாளில் மன்னர் மனையுள் .
அளவிலாச் செவ்வியர் அடங்கி யிருந்தனர்;15
அத்தகு மன்னர் அடியேன் சிற்றிலில்
அடங்கி யிருந்து தொடங்கின ராயின்
என்தவப் பேற்றை யாதென மொழிவேன்’
என்றுதம் நன்றியை எடுத்துரைத் தனரே.


  1. தெ. பொ. மீ
  2. நாவலர் ச. சோ. பாரதியார்
  3. கரந்தை நீ. கந்தசாமிப் பிள்ளை
  4. சன்மார்க்க சபையார்