பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிணியுறு காதை

கஉஎ


அருகிருந்த முருகப்பர் துணையை நோக்கி
‘அம்மாஅம் மா’வென்று கூவி விட்டார்
கருவிருந்து பெற்றெடுத்த தாயை இன்று
காண்கின்றேன் உம்முருவில் அம்மா! அம்மா!
உருகுகிற தெனதுமனம் என்னைக் காண
ஓடோடி வந்தீரே! அம்மை யப்பர்
அருகில்வரல் போலுணர்ந்தேன் எனப்பு லம்பி
அழுதழுது கண்ணீரில் நனைந்தி ருந்தார்.6

பாட்டுக்குள் நயமுரைத்து மகிழ வைத்த
பண்பட்ட செந்நாவில், தமிழ்மு ழக்கம்
கேட்பிக்கும் மணிநாவில், புலம்பல் ஒசை
கேட்டதனால் மனமுருகிக் கண்ணீர் சிந்தி
நாட்டுங்கற் சிலையானோம் சிறிது நேரம்
நாவசைய விலைஎமக்குப் பின்னர்த் தேறி
ஏட்டுக்குள் ளடங்காத துயரம் மாற
இயன்றவரை முருகப்பர் எடுத்து ரைத்தார்.7

ஆறுதலை வைத்தானைப் பரவும் அன்பர்
ஆறுதலைப் பெற்றவராய்ப் பேச லுற்றார்,
“சிறதலை உம்மிடத்துக் கொண்ட தாலே
சிலநேரம் உமைத்தாக்கிப் பேசி யுள்ளேன்
மாறுதலைப் பெரிதாக மனத்துட் கொண்டேன்
மனங்கொள்ளா ததையெல்லாம் மறந்து
விட்டுத்
தேறுதலைக் கூறுதற்கு வந்தீர் உங்கள்
திருவுளத்துப் பெருமையினைத் தெரிந்தே
னல்லேன்.8