பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. கதிர்மறை காதை




தமிழக மெங்கனும் தண்டமிழ் பரப்பி
'அமுதம் எனுந்தமிழ் அள்ளி யள்ளிப்
பருகின ராதலின் பாரில் அமரர்தம்
பெருகிய சிறப்பினைப் பேணிக் கண்டவர்,
வாழும் முறையால் வையத் தகத்து
வாழும் உயரிய வாழ்வினைப் பெற்றவர்,
உரனெனுந் தோட்டியால் ஒரைந்துங் காத்து
வரன்முறை தெரிந்து வழுவிலா தமைந்தவர்,
பொய்ம்மை தவிர்ந்து மெய்ம்மை விழைந்து
செய்வன யாவும் செவ்விதிற் செய்தவர்,வார்ப்புரு:Float-right
இழுக்கல் அறியா ஒழுக்கக் குன்றில்
முழுக்க ஏறிய முதுபெரும் புலவர்
பண்டைத் தமிழும் படர்வட மொழியும்
கண்டத் துறையில் பண்டித மணியென
ஆனவர் ஒருநாள் அற்றைக் கடன்களை 15
ஆன முறையால் இயற்றி அயர்ந்தனர்.
காய்கதிர் வானிற் சாய்பொழு தானது
சாய்வுநாற் காலியிற் சாய்ந்தவர் இருந்துழி