பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்மறை காதை


‘அறுபத்து மூவர்வர
லாறுதெளிந் தறிந்தனைநீ
ஒருபத்தும் தொகையெட்டும்
உளவாறு நுகர்ந்தனைநீ
இருபற்றும் உடைமையினால்
எழிற்றமிழும் சிவநெறியும்
பருவத்துப் பயிர்போலச்
செழித்துயரப் பரப்பினை நீ’.7

‘மறவாத சிவனடியும்
மருளாத தமிழுணர்வும்
திருவாத வூரடிகள்
வாசகமும் தெளிந்ததனால்
பிறவாத பேரியாக்கை
பெருமாறு வேண்டுதுமென்
றொருவாத அன்புளத்தால்
திருமடங்கள் ஒதினவே. 8

மாணவர் புலம்பல்


அழுக்கறுக்கும் நூல்களிலே பெரியனவாம்
அரியனவாம் என்ப வேனும்
பழுத்திருக்கும் நுண்மதியால் எளிதிலவை
படிப்பித்தாய், எங்கள் வாழ்வில்
முழுத்தகுதி பெறுவதற்கும் நல்வழிகள்
மொழிந்தாய்நீ மறப்ப தேயோ?
வழுத்துகிறோம் நின்னடியை என நினைந்து
மாணவர்தாம் வணங்கி நின்றார்.9