பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


தமிழ்நாடு தமிழ்மகனே உன்னே யீன்ற
தாய்நாடு ; குருதியுடன் கலந்து நிற்கும்
தமிழ்நாடு [1], பிறமொழிக்குத் தொழும்ப னாகித்
தலைகுனிய நாடாதே என்று ரைத்துத்
தமிழ்வாழத் துடிதுடித்த தமிழர் ஆட்சி
தமிழ்நாட்டில் தலைதுாக்கி நின்ற நாளில்
தமிழ்வானிற் கதிரானோர் சிலைதி றக்கத்
தமிழரசு பேருதவி செப்த தங்கு.3

பறம்புமலை கொல்லிமலை ஒக்கூர் என்னும்
பழம்பெருமை கொண்டிலங்கும் ஊரில் எல்லாம்
கரும்புநிகர் தமிழ்மொழிக்குச் [2]சாறெடுத்துக்
களிகொண்ட தமிழரசு பூங்குன் றத்து
வரும்புலவர் மாமணியைச் சிலையிற் கண்டு
வணங்கியது வாழ்த்தியது மேலும் பண்டைப்
பெரும்புகழான் மேம்படுநல் லூர்கள் தேடிப்
பெருமைசெயும் ஆர்வத்தால் விளங்கிற் றிங்கே.4

எத்துயரம் ஏற்றாலும் தமிழ்மொ ழிக்கே
என்வாழ்வு தாய்மொழியைக் காக்கும் போரில்
செத்தொழிய நேர்ந்தாலும் அந்த நாளே
திருநாளாம் என முழங்கும் அரிமா ஏறு;
பத்தியுடன் தமிழ்ச்சான்றோர் தாள்வ ணங்கும்
பண்புடையார்;[3]உயர்கலைஞர்; அவர்தாம்
எங்கள்
முத்தமிழ்தேர் மு. க. வின்[4] சிலையை நாட்டின்
முதலமைச்ச ராயிருந்து திறந்து வைத்தார். 5


  1. தமிழை விரும்பு
  2. விழா
  3. முதல்வர்.மு.கருணாநிதி
  4. மு.கதிரேசனார்