பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

க௪உ

ஊன்றுகோல்


'உரியதன் மொழியில் ஆக்கம்
உயர்ந்திட ஒம்பிக் காத்துத்
தெரிதருஞ் சுவையை மாந்தத்
தெரிகிலா நாடு தானும்
பெரியதே எனினும் யாவும்
பின்னடைந் தழியும்; உள்ள
பெருமையுந் தேயும் என்றே 9
பேசினர் மதியா லாய்ந்து.

“தாய்மொழி என்று சொல்லும்
தனிமொழி எதுவோ அந்தத்
தூய்மொழி வாயி லாகத்
தொடங்கிடும் கல்வி தன்னைச்
சேய்களும் முதற்கண் கற்றுத்
தெளிந்திடல் வேண்டும் இன்றேல்
தேய்வுறும் அறிவென் றெண்ணித்
தேர்ந்தவர் தெளிந்து சொன்னார். 10

'பிறந்ததன் னாட்டிற் பேசும்
மொழியினைப் புறக்க ணித்து
மறந்தயல் மொழிக்காட் பட்டு
மனத்துறக் கற்றா ரேனும்
சிறந்தநன் மொழியாற் கொள்ளும்
சீர்மையில் முற்றுப் பெற்ற
திறந்தனைக் கொண்டா ரென்று
செப்பிடல் அரிதே' யென்றார். 11