பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கவியரசு முடியரசன் மதுரை மாவட்டம் பெரிய குளத்தில் 7—10—1920-இல் பிறந்தார். இவர் இயற்பெயர் துரைராசு. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையில் படித்து 1947-இல் வித்துவான் பட்டம் பெற்றார். கலைச் செல்வி எனும் நங்கையை 1949-இல் கலப்புத் திருமணஞ் செய்து கொண்டார்.

சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலப்பள்ளியிலும் காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிசெய்தார்.

பொன்னி, குயில், போர்வாள். முருகு முதலிய இதழ்களில் இவர்தம் கவிதைகள் மலர்ந்தன. முடியரசின் கவிதைகள் என்ற நூலும் வீரகாவியம் என்ற நூலும் தமிழக அரசின் பரிசுகள் பெற்றவை

.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1966 பாரி விழாவில் ‘கவியரசு’ என்ற பட்டம் வழங்கினர்.