பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்

33

"ஒருநாள் மகிபாலன் பட்டிக்குள் உற்ருர் மறுநாளும் வந்துசெல மற்றும் மனம்விழையார் கற்ருழை கள்ளி கருநாகம் புக்குவரும் புற்றாலே” எங்கும் பொலிந்திருக்கும்; வான்முகில்தான். சற்றே பொழியின் சகதி நிறைந்திருக்கும் பற்ருக் குறைக்கங்குப் பள்ளம் படுகுழிகள்; ஆற்றில் புனலும் அடித்துத் திரண்டுவரும் சேற்று நிலமாய்அச் சிற்றுரர் விளங்கும்: பகடு தனப்பூட்டிப் பண்டியில் ஊர்வோர் சகடு தனையிழுக்கத் தாங்குதித்து நிற்பார்: சுடுகாடும் அங்கே சுடர்விட்டுக் கண்ணிற் படுமாறு தோன்றிப் படர்வாரை அச்சுறுத்தும், கள்வர் சிலரும் கரந்து திரிந்திடுவர்; பேருந்து செல்லாப் பெருமை உடையதோர் ஊரந்த ஊரேதான்; யாரங்குச் செல்வார்கள்?"

இத்தகைய ஊரினைச் சீர்திருத்திய மணியாரின் முயற்சி, பொதுப்பணிபுரி காதையில் எடுத்துரைக்கப்படுகிறது. இத்தகைய பின்புலமான செட்டிநாட்டில் அன்று பலவூர்கள் இவ்வாறே இருந்தன. வெளிநாடு செல்வதே குறிக்கோளாகக் கொண்டவராதலின் தத்தம் ஊர் நலனே அவர்கள் கருதிலர். எழு தப்படிக்கத் தெரிந்தால் போதும்; அப் பையனை வெளிநாட்டிற்கனுப்பிவிடுவர்.

“திண்ணையில் அமைந்த பள்ளி
திருத்திடும் ஆசாற் சார்ந்தங்கு
எண்ணுடன் எழுத்தும் கற்கும்
இளையநற் பருவத் தாரைக்
கண்ணெனும் வணிக நோக்கில்
கலத்தினிற் செல-விடுத்தல்
பண்ணுயர் செட்டி நாட்டுப்
பழங்குடி வழக்க மாகும்” (2:10) ”

அதற்கேற்பப்பண்டித மணியா கும் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் துணிக்கடை வாணிகத்தில் அமர்த்தப்பட்டார். அவர் புத்தகம் எழுதுங்கையால், புதுத்துணி மடித்துத் தந்தார். கவிஞர் கருத்துப்படி, பிற்காலத்தில் பத்துடன் சங்கத் தொகையைச் சொல்வார், பணத்தொகை விலையைச் சொல்லி வாழ்ந்து வந்தார். துணிநயத்தை விரல்கள் தொட்டுப் பார்த்தாலும் செக்தயத்திலேயே சிந்தை கோய்த்து திண்மசாம்.