பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நகரத்தார்கள் முயற்சிமிக்கவர்கள். ஒன்று பெற்றாலும் அதனேயே தம் முயற்சியால் பத்தாகப் பெருக்கிக்கொள்ள வல்லவர்கள். மற்றவர்கள் பத்தைப் பெற்றாலும் ஒன்றே இரண்டோதான் மீத்துவைப்பர். நகரத்தார்க்கும் பிறர்க்கும் இஃதொரு அடிப்படை வேறுபாடாகும். இத் திறமையைக் கதிரேசர் கல்வியிற் காட்டித் தம் புலமையைப் பெருக்கிக் கொண்டார் என்பது கவிஞரின் மதிப்பீடு.

“பெற்றிடும் ஒன்றைக் கொண்டே
பத்தெனப் பெருக்கிக் காட்டக்
கற்றவர் குடியில் வந்த
கதிரேசச் செம்மல்- (2:41) ”

என்று ஒரு சமுதாயச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஈட்டுதல், சேமித்தல், வழங்குதல் என்பன அண்ணாமலை அரசர் கண்ட குறிக்கோள்கள். இது செட்டிநாட்டவர் அனைவரின் குறிக்கோள்களே எனப் பொதுவகையில் கூறலாம். இவற்றை நகரத்தார் பண்பில் தோய்ந்த நலன்கள் எனவும் சுட்டலாம். ஒருசாதி, ஒருசமூகம் என்ற உண்ர்வு குறுகியதே. ஆயின் அவ்வுணர்வே நாட்டுநலனும் மொழிநலனுமாகிய பொதுநலனே வளர்க்கப் பயன் படுமாயின் அது சாலச் சிறந்ததன்றோ? நகரத்தார்கள் என்றும் நகரத்தார்க்கு மட்டுமே என் நலன்நாடி உழைத்த தில்லை. உண்மையிற் சொல்லப்போனால், நகரத்தார் எவரும் மற்ருெரு நகரத்தாருக்கு மனமுவந்து உதவ முன்வருவதில்லை. அங்ஙனம் யாரும் உதவினார்களாயின், அதற்குத் தவிர்க்க முடியாத காரணமுண்டென்பதே உண்மை. எனினும் உலகு வாழ உதவும் அவர்கள் மனப்போக்கு உவகைதருவதேயாம். பாவலர் ஏறு முடியரசர் பெருமிதத்தோடு புனையும்போது, நெஞ்சம் கிளுகிளுக்கத்தான் செய்கிறது.

திருக்கோயில் பலஎழுப்பச் சிதைவிடத்துத்
திருப்பணிகள் எனும்பேரால் திருத்திக்கட்ட
வெருக்கொள்ளும் வெயில்நாளில் வேட்கையுடன்
வருவார்க்கு விழைந்தெழுந்து தண்ணீர்ப்பந்தர்
உருக்கொள்ளு மாறமைக்க, உணவுதரும்
அறச்சாலை உண்டாக்க, குளங்கள் தோண்ட
பெருத்தநிதி எடுத்தெடுத்து வழங்குவது
பெருமை எனப் பேணுவது வணிகர்நாடு