பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கலைபயில் காதை

௧௧

படித்தனன் ஏழு திங்கள்
பயின்றது போதும் என்று
தடுத்திட எண்ணி முற்றுப்
புள்ளியும் தந்தை வைத்தார்
அடிக்கடி படித்த பாடல்
அடிமனத் தெழுந்து நின்று
நடித்ததோர் இன்பக் கூத்து
நாளெலாம் நினைந்து பார்த்தான் 6

பள்ளியில் ஏழு திங்கள்
பயில்கதி ரேசப் பிள்ளை
தெள்ளிய மதிய ராகித்
தேர்ந்தநற் புலவ ராகி
அள்ளிய புகழாம் செல்வம்
அளப்பில பெற்ருன் என்றால்
உள்ளவும் படுமோ அந்த
ஒய்விலா உழைப்பை அம்மா! 7

இருமொழி வல்ல ரானார்
இனியசொல் வல்ல ரானார்
உரைசெய உரிய ரானார்
உயர்கவி தருவ ரானார்
பொருள்நயம் தெரிய லானார்
புகழும் நூல் வரைய லானார்
வருமிவை இங்கள் ஏழில்
எவ்வணிம் வாய்த்த வம்மா! 8